ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி <!– ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்… –>

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 13 கோடியே 14 இலட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை அண்மையில் வாங்கியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் தெற்கு மும்பையில் உள்ள மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் அந்தக் கார் இரண்டரை டன் எடையும் 564 பிஎச்பி திறனும் கொண்டது.

கரடுமுரடான பாதையிலும் செல்வதற்கு ஏற்றது. 2018இல் அறிமுகமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் அடிப்படை விலை 6 கோடியே 95 இலட்ச ரூபாயாகும்.

தேவையான வசதிகளுடன் மாற்றியமைத்ததால் விலை 13 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகக் கூறப்படுகிறது. இந்தக் காருக்கு ஒருமுறை வரியாக 20 இலட்ச ரூபாயும், சாலைப் பாதுகாப்பு வரியாக நாற்பதாயிரம் ரூபாயும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் தனிச்சிறப்பான பதிவெண்ணான 0001 யை பெற 12 இலட்ச ரூபாயைச் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.