Vivo latest 5G ஃபோனை ரூ.1,196 வாங்க இன்றுதான் கடைசி வாய்ப்பு!

Flipkart இன் Big Bachat Dhamal விற்பனையின் கடைசி நாள் இன்று அதாவது பிப்ரவரி 5. Vivo V23 5G இல் கிடைக்கும் சலுகை இன்றுடன் முடிகிறது. 

Big Bachat Dhamal Sale Flipkart (Flipkart Sale) இல் கடந்த இரண்டு சீசன்களாக மிக அதிக தள்ளுபடி கிடைத்துவருகிறது, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்து தயாரிப்புகளுக்கும் பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோவின் சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போனான விவோ வி23 5ஜியை இந்த தள்ளுபடி விற்பனையில் ரூ.1,196க்கு எப்படி வாங்கலாம்?

ALSO READ | Flipkart offer: ஹலோ! iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி! ஆர்டர் போட்டாச்சா?

Vivo V23 5G ஐ 1,196 ரூபாய்  
Vivoவின் இந்த 5G ஸ்மார்ட்போன் நாட்டின் முதல் சூப்பர் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் சந்தை விலை ரூ.37,990. Flipkart இன் Big Bachat Dhamal விற்பனையில், 7% தள்ளுபடிக்குப் பிறகு 34,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அப்படி என்றால் எப்படி ரூ.1,196க்கு இந்த போனை வாங்குவது? இந்த விலை போனின் ஆரம்ப EMI விலை ஆகும். ஐசிஐசிஐ வங்கி இந்த விலையில் தவணை வசதியை வழங்குகிறது, 

36 மாத தவணைகளில் 1,196 ரூபாய்க்கு இந்த போன் கிடைக்கும். 5,832 ரூபாய்க்கு கட்டணமில்லா EMI (no-cost EMI) சலுகையிலும் இந்த போனை வாங்கலாம்.

இந்த Vivo ஸ்மார்ட்போனில் தள்ளுபடி கிடைக்கும்
இந்த போனை EMI இல்லாமலும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் (Flipkart Sale) ரூ.37,990க்கு பதிலாக ரூ.34,990க்கு விற்கப்படுகிறது.

இது தவிர, HDFC வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை வாங்கும் போது பயன்படுத்தினால், 10% உடனடி தள்ளுபடி அதாவது 2 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது 32,990 ரூபாய்க்கு போனை வாங்க முடியும்.

ALSO READ | உலகிலேயே மிகப்பெரிய பவர்பேங்க் TV, ஃபிரிட்ஜூக்கும் சார்ஜ் செய்யலாம்

Vivo V23 5G இன் அம்சங்கள்
Vivo வழங்கும் இந்த நிறத்தை மாற்றும் 5G ஃபோன் 6.44-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே, 12GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 
இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் இரட்டை முன் கேமரா அமைப்பு ஆகியவை உள்ளன.

பின்புற கேமராவின் முதன்மை சென்சார் 64MP, இரண்டாவது 8MP மற்றும் மூன்றாவது சென்சார் 2MP ஆகும். முன் கேமராவின் பிரதான சென்சார் 50MP மற்றும் இரண்டாவது சென்சார் 8MP ஆகும். இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போன், 4,200எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

பிளிப்கார்ட்டின் இந்த பிக் சேவிங்ஸ் தமால் விற்பனையில் இருந்து இதுபோன்ற இன்னும் பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இன்று அதாவது பிப்ரவரி 5 இந்த விற்பனையின் கடைசி நாள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,500க்கு Samsung 32-இன்ச் Smart TV வாங்கலாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.