இது என்னடா தேமுதிகவுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிப்ரவரி 5-ம் தேதி வேட்புமனு பரிசீலனையானது நடைபெற்றது. அதில், தகுதியில்லாத நபர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 142 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்ட்டில் கூட போட்டியிடவில்லை. இதனால் தொண்டர்கள் கவலை அடைந்து உள்ளனர். கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 157 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் இந்த நகராட்சியிலும் ஒரு வார்டில் கூட தே.மு.தி.க. போட்டியிடவில்லை.

நம்பியூரை அச்சுறுத்தும் சிறுத்தை!! – பொதுமக்களுக்கு தண்டோரா எச்சரிக்கை…

கடந்த முறை தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட 2 பேர் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்த நிலையில் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாதது கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்டில் கூட போட்டி இடவில்லை. கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளே ஈரோடு மாவட்டத்தில் தேமுதிகவை இந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.