உஷார் மக்களே.! போலி வெப்சைட் – EB பில் கட்டி ஏமாற வேண்டாம்

ஆன்லைன் செயலிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வழியாக வீட்டில் இருந்தபடியே மின்கட்டணங்களை செலுத்த முடியும். இதனை வைத்து முறைகேடு ஒன்றை அரங்கேற்றிள்ளது ஜார்க்கண்டைச் சேர்ந்த கும்பல். 

ALSO READ | முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் சொகுசு கார்..! விலை எவ்வளவு தெரியுமா?

மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோ நிறுவன லிமிட்டெட் தளத்தைப்போல் போலி வெப்சைட் ஒன்றை உருவாக்கிய அந்த கும்பல், வாடிக்கையாளர்களின் தொலைபேசிக்கு, மோசடியாக உருவாக்கிய வெப்சைட்டில் இருந்து மின் கட்டணம் செலுத்துமாறு மெசேஜ் அனுப்பியுள்ளனர். எச்சரிக்கை மெசேஜ் என அவர்கள் அனுப்பியதால், உண்மையென நம்பிய பலர் அந்த வெப்சைட் மூலம் பணத்தை செலுத்தியுள்ளனர். மொத்தமாக 65,648 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 

பின்னர் இது போலி என்பதை அறிந்து கொண்ட பலர், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்தனர். பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் புகார்கள் குவிந்ததால், சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், ஜார்க்கண்டைச் சேர்ந்த கும்பல் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகாராஷ்டிரா பகுதியில் இருக்கும் மொபைல் எண்களை முறைகேடாக பெற்று, தங்கள் வெப்சைட் மூலம் மோசடியை  அரங்கேற்றியதாக தெரிவித்துள்ளார். தலைமறைவாக இருக்கும் இன்னும் சிலரை தேடி காவல்துறையினர் வருகின்றனர். 

ALSO READ | மும்பையில் முடங்கிய ஜியோ நெட்வொர்க்..! வாடிக்கையாளர்கள் அவதி

இதுபோன்ற போலி மெசேஜ்ஜூகளை நம்ப வேண்டாம், வெப்சைட்டின் உண்மை தன்மையை ஆராய்ந்து அதன்பிறகு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும் என மகாராஷ்டிரா காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.