கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்: 17 வயது சிறுமி ‘பகீர்’ புகார்

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பாண்டேஸ்வர் மகளிர் காவல் நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று காலையில் புகாரை ஒன்றைக் கொடுத்தார். அந்த புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

ALSO READ | வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்களூர் நகரின் பாண்டேஸ்வர் மகளிர் காவல் நிலைய போலிஸார் மற்றும் மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சோதனையிட்ட போது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான ஷமீனா மற்றும் ஆயிஷாமா மற்றும் சமீனாவின் கணவர் சித்திக் ஆகியோர் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வந்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

மேலும் சித்திக் ஆயிஷா,ஷமீனா மற்றும் அங்கிருந்த 2 இளம்பெண்களை போலிஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்த 5 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்டவர்களிடம் முதல்கட்ட விசாரணை நடத்தியபோது, மங்களூரில் உள்ள கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாண்டேஷ்வர் மகளிர் காவல் நிலைய போலிஸார் தற்போது பிடிபட்ட ஆயிஷா மற்றும் ஷமீனாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, ஷமீனாவின் கணவரான சித்திக் உடந்தையாக இருந்துள்ளதால் அவரிடமும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.