சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதி: பாமாயில் விலை ‘கிடுகிடு’

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த வாரம் பாமாயில் டின்னுக்கு ₹120 உயர்ந்த நிலையில், நடப்பு வாரத்தில் டின்னுக்கு ₹40 உயர்ந்துள்ளது.  மலேசியாவில் பாமாயில் உற்பத்தி குறைந்து  வரும் நிலையில், சீனாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்வதால் பாமாயில்  விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் விலை உயர்ந்த கடலை எண்ணெய் டின்னுக்கு ₹30 குறைந்துள்ளது. கடலை எண்ணெய் டின் (அடைப்பிற்குள் கடந்த வார விலை) ₹2,700 (2,730), பாமாயில் ₹2,000 (1,960). கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம், நாகலாபுரம் புதூர் பகுதிகளில் இருந்து உளுந்து, பயறு வரத்து உள்ளது. விலைகளில் மாற்றமில்லை. வரத்து அதிகரிக்கும் நிலையில் வரும் வாரங்களில் உளுந்து, பயறு விலை குறைய வாய்ப்புள்ளது.விருதுநகர் மார்க்கெட்டில் விலை நிலவரம்: உளுந்து (100 கிலோ) லயன் – ₹7,100, பர்மா உளுந்து பருவட்டு –  ₹7,000, பர்மா பொடி  – ₹6,400, உருட்டு உளுந்தம்பருப்பு லயன்  – ₹10,500, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பொடி  – ₹9,000, பருவட்டு  – ₹9,500, தொளி உளுந்தம்பருப்பு  – ₹9,000. பர்மா பாசிப்பயறு (100 கிலோ)  – ₹7,000, ஆந்திரா பயறு –  ₹7,000, நாடு பயறு  – ₹6,800, அவியல் பாசிப்பயறு  – ₹9,500, பாசிப்பருப்பு நாடு  – ₹9,200, பாசிப்பருப்பு லயன் –  ₹9,500, பாசிப்பருப்பு பர்மா  – ₹9,000. தான்சானியா துவரை (100 கிலோ) –  ₹5,500, துவரம்பருப்பு இறக்குமதி  – ₹9,000, லயன் துவரை  – ₹7,000, துவரம் பருப்பு லயன் –  ₹10,000, உடைப்பு துவரம் பருப்பு  – ₹8,500 என விற்பனையானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.