தமிழகத்தில் அடக்கி வாசிக்கும் கொரோனா – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,120 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,23,537 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 6,120 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,10,882 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,25,25,017 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 3,660 பேர் ஆண்கள், 2,460 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19,90,480 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,20,364 ஆகவும் அதிகரித்து உள்ளது. 23,144 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32,51,295 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு?

26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 16 பேரும் , அரசு மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,759 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1223 ஆக இருந்த நிலையில் இன்று 972 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.