துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், மதன் கார்க்கி எழுத்தில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவை படம்  ‘ஹே சினாமிகா’.  இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் (Dulquer Salmaan), காஜல் அகர்வால், அதிதி ராவ், ஷியாம் பிரசாத் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.  மேலும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார்.

ALSO READ | நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்..!

2015ல் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ (O Kadhal Kanmani)படத்திலுள்ள ஒரு பாடலின் வரி தான் இப்படத்திற்கு  ‘ஹே சினாமிகா’ என்று தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2020-ம் ஆண்டு இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது.

Image

இப்படத்தில் நடித்தது குறித்து துல்கர், இது ஒரு சிறந்த தொடக்கம், இப்படத்தின் பயணத்தை அன்பான பெண்களான காஜல் அகர்வால், அதிதி ராவ் மற்றும் பிருந்தா மாஸ்டருடன் தொடர்வது எனக்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் பிப்ரவரி மாதம் 25ம் தேதி ரிலீசாகும் என்று அறிவித்து இருந்தது.  ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு இருக்கிறது.  தற்போது ‘ஹே சினாமிகா’ படம் மார்ச் மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது.  பிப்ரவரி 24ம் தேதி வலிமை படமும், மார்ச் 10ம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் வெளிவர உள்ள நிலையில், இரண்டு படத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இப்படம் வர உள்ளது.

 

ALSO READ | இரண்டு பாகங்களாக வெளிவரும் விக்ரமின் துருவ நட்சத்திரம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.