‘கவலை வேண்டாம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். பின்னர் துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், IAMK போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின்னர் இவருக்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் (Big Boss) இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் கவனத்தையும் பெற்றார்.
ALSO READ | பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம்!
இந்நிகழ்ச்சியில் இவருக்கும் மஹத்துக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் நண்பர்களாகவே தொடர ஆரம்பித்தனர். யாஷிகா-மஹத் இடையேயான காட்சிகள் சூடு பிடித்தது, பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கியவர், சமீபத்தில் அவரது நெருங்கிய தோழி ஒருவருடன் பார்ட்டி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் (Accident) காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இவருடன் சென்ற தோழி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை சரியாகி, தோழியின் மரணம் குறித்த கவலையிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறார். பல பிரபலங்களிடமும் ரசிகர்கள் வழக்கமாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்வி கேட்பது போல், இவரிடம் அடிக்கடி இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருவார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் எதிர்ப்பாராத அதே சமயம் அதிர்த்தியான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார், அதற்கு யாஷிகாவும் கூலாக பதிலளித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அப்படி என்னதான் கேள்வி கேட்டார் என்றால், “நீங்கள் வெர்ஜினா? என்று யாஷிகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார், அதற்கு எவ்வித தயக்கமும், கோவமும் காட்டாமல் யாஷிகா கூலாக “நான் வெர்ஜின் இல்லை, யாஷிகா” என்று கூறியுள்ளார். இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் நேர்மறையான கமெண்டுகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ்-5ல் போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்று கொண்ட நிரூப் யாஷிகாவின் முன்னாள் காதலர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை உறுதி செய்யும் விதமாக நிரூப் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் எனக்கு இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வாங்கி தந்தது யாஷிகா தான், அவள் என் முன்னாள் காதலி என்று கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் இடையில் கூட யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபொழுது, நிரூப் மற்றும் யாஷிகா ஒருவருக்கொருவர் பாசமழையை பொழிந்து கொண்ட சம்பவம் அனைத்தையும் நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் யாஷிகாவிடம் மற்றொரு ரசிகர் ஒருவர் “நீங்கள் நிரூப்பை திருமணம் செய்யபோகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு யாஷிகா “எங்களுக்குள் பிரேக்கப் ஆகிவிட்டது, நாங்கள் இருவரும் தற்போது நல்ல நண்பர்கள். எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ | பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!