புதிய லோகோவில் Google Chrome..! 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம்

உலகின் முன்னணி பிரவுசரான கூகுள் குரோம் (Google Chrome) 8 ஆண்டுகளுக்குப் பிறகு லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் குரோம் லோகோ  வடிவமைப்பாளரான எல்வின் ஹு (Elvin Hu) டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தன்னுடைய பதிவில் கூகுள் குரோமின் புதிய வடிவமைப்பையும் அவர் பதிவிட்டுள்ளார். புதிய லோகோ மாற்றம் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், “உங்களில் சிலர் இன்று Chrome -ன் ஒரு புதிய ஐகானைக் கவனித்திருக்கலாம். ஆம்! 8 ஆண்டுகளில் முதல் முறையாக Chrome -ன் பிராண்ட் ஐகான்களைப் புதுப்பிக்கிறோம். புதிய ஐகான்கள் உங்கள் சாதனங்களில் விரைவில் தோன்ற தொடங்கும்.” என தெரிவித்துள்ளார். 

ALSO READ  | Apple Deal; இந்த iPhone ஐ 31 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க அரிய வாய்ப்பு

கலர் விகித்தாச்சாரங்கள் வேறுபடுத்தப்பட்டு, முன்பிருந்ததைவிட பிரகாசமாக இருக்கும் வகையில் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில் நீலநிறப்பந்து கொடுக்கப்பட்டுள்ளது. Windows, MacOS மற்றும் iOS ஆகியவற்றில் இந்த புதிய லோகோ விரைவில் தோன்ற உள்ளது. “ஓ.எஸ்.சார்ந்த தனிப்பயனாக்கங்களை நாங்கள் உருவாக்கினோம். Chrome ஐகான் எளிதில் அடையாளம் காணப்பட வேண்டும். விண்டோஸ் 10 மற்றும் 11 ஹோம் பேஜ்ஜில் கூகுள் குரோம் ஐகான் தோற்றம் இனி வித்தியாசமாகவும், தனியாகவும் தெரியும்” என ஹூ கூறினார். 

ALSO READ | கல்லூரி கட்டணத்தை Paytm மூலம் செலுத்துவது எப்படி?

Chrome Canary பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய லோகோ உடனடியாக தெரிய தொடங்கும் என கூறியுள்ள ஹூ, கூகுள் குரோமின் புதிய ஐகான் நிச்சயம் அனைவரையும் கவரும் எனக் கூறியுள்ளார்.  கூகுள் குரோம் கேனரி 100வது வெர்சனை பெற இருப்பதை கொண்டாடும் வகையில் குரோம் ஐகான் மாற்றப்பட்டுள்ளது. லோகோவைப் பொறுத்தவரை ரெட், ப்ளூ மற்றும் கிரீன் ஆகிய நிறங்கள் மாற்றப்படவில்லை. அவற்றின் சேட்யூரேஷன் மற்றும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.