போ ராசா … போ… ஆதிவாசிகளின் குரலுக்கு கட்டுப்பட்டு பஸ்சுக்கு வழிவிட்ட காட்டு யானை

பெ.நா.பாளையம். :  கோவை அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை ஆதிவாசிகளின் குரலுக்கு கட்டுப்பட்டு காட்டுக்குள் ஒதுங்கி சென்ற சம்பவம் ஆர்ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரத்தில் இருந்து ஆனைகட்டிக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் புறப்பட்டது.மாங்கரையை கடந்து தூமனூர் பிரிவு என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது  ஒற்றை ஆண் காட்டு யானை ரோட்டின் நடுவே நின்றது. பஸ்சை நிறுத்திய டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பி யானையை விரட்ட முயன்றார். ஆனால் அதை கண்டு கொள்ளாத யானை அங்கேயே நின்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தனர். அப்போது உள்ளே இருந்த ஆதிவாசிகள் சிலர் டிரைவர் சீட் அருகே உள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்து அவர்களது பாஷையில் போ…. ராசா….போ… என்று சத்தமாக சைகையுடன் சொல்லிக் கொண்டே இருந்தனர். சிறிது நேரம் இதை கேட்ட காட்டு யானை பஸ்சிற்கு வழிவிட்டு அருகில் இருந்த காட்டு பகுதிக்கு அமைதியாக தும்பிக்கையை தூக்கி காட்டியபடி சென்றுவிட்டது. இதை பார்த்து பயணிகள் ஆச்சரியப்பட்டு ஆதிவாசி மக்களை பாராட்டினர். இந்த நிகழ்ச்சி முழுவதையும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தவர்கள் அதை இணையத்தில் வைராலாக்கி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.