முழுநேர கேப்டனாக ரோஹித் தலைமையில் முதல் ODI!

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட உள்ளது.  முதல் ஒருநாள் போட்டி இன்று அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் இஷான் கிஷான் என்னுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.  தற்போது மயங்க் அகர்வால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர் வரும் வரை இஷான் ஆடுவார் என்று கூறினார். 

ALSO READ | புதிய விதிமுறைக்கு எதிராக சச்சின் போர்க்குரல்..!

ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கோவிட்-19 (Covid 19) தொற்று காரணாமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித், “மயங்க் அணியில் சேர்க்கப்பட்டார், இருப்பினும் அவர் இன்னும் தனிமையில் இருக்கிறார். அவர் தாமதமாக அணியில் இணைந்தார்.  எங்களுக்கு சில விதிகள் உள்ளன, யாராவது பயணம் செய்து இருந்தால் அவர்களை கட்டாயமாக 3 நாள் தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும்.  தவான், கெய்க்வாட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம்.  

தற்போது மூன்று பேரும் தனிமையில் உள்ளனர். அவர்கள் சிறப்பான வீரர்கள், தற்போது உள்ள சூழ்நிலையில் எதுவுமே நிச்சயமற்றது.  விராட் (Virat Kohli) விட்டுச்சென்ற இடத்திலிருந்து அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்.  விராட் கேப்டனாக இருந்தபோது, ​​நான் துணை கேப்டனாக இருந்தேன். அவர் சென்ற இடத்திலிருந்து நான் அதை தொடங்க வேண்டும். அதே டெம்ப்ளேட்டை நாங்கள் தொடர விரும்புகிறோம். நாங்கள் அதிகம் எதையும் மாற்றம் செய்ய வேண்டியதில்லை.  தற்போது உள்ள ODI அணியில் பெரிய மாற்றங்கள் தேவை இல்லை.  உண்மையில் சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.  ஒரு தொடரில் தோல்விக்காக அணியை மற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்று ரோஹித் கூறினார்.

இந்திய அணி 

ரோஹித் சர்மா (C), ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான் 

மேற்கிந்திய தீவுகள் அணி

ஷாய் ஹோப், கீரன் பொல்லார்ட் (C), பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஷமர் புரூக்ஸ், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், ஹெய்டன் ஹோசின், ஹெய்டன் ஹோசின், கெமர் ரோச், என்க்ருமா பொன்னர்

ALSO READ | ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.