ரகசிய இடத்தில் உதயநிதி ஸ்டாலின்; போட்டு உடைக்கும் மாஜி அமைச்சர்!

விருதுநகரில் முன்னாள் அமைச்சர்
மாஃபா பாண்டியராஜன்
செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

உதயநிதிக்கு Tough கொடுக்கும் CM..மீண்டும் இளைஞரணி?

சமூக நீதியின் முதல் குரல் விருதுநகர் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் எழுந்தது. சமூகநீதி காத்த வீராங்கனை என்று யாருக்கு பட்டம் கொடுத்தார்கள்? என அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு தெரியும்.

ஜெயலலிதா வாயில் ஆலகால விஷம்; பகீர் தகவல் வெளியானது!

சமூக நீதி 69 விழுக்காடு என நிலைநாட்டியது ஜெயலலிதாதான் என்பது தங்கம் தென்னரசுவிற்கு தெரியும். சமூக நீதி என்றாலே அது
அதிமுக
ஆட்சிதான் என அரசியல் அரிச்சுவடி படித்தவர்களுக்கு தெரியும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இணைந்து சமூக நீதிக்காக பெரும்பங்காற்றி உள்ளனர்.

சமூக நீதி கட்டமைப்புக்கான முதல் அழைப்பிதழை சோனியா காந்தியிடம் வழங்கி இருக்கின்றனர். காங்கிரஸ் சமூக நீதிக்கு எதிரான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு?; பீதி தரும் புதிய அறிவிப்பு!

அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக உட்காருமா? அது சாத்தியமா? அதைத்தான் ஓபிஎஸ் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
திமுக
பாஜகவுடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது பாஜகவின் சமூக நீதி பற்றி திமுகவிற்கு தெரியவில்லையா?

தேர்தலுக்காக கூட்டணி வைத்து இருப்பதால் அவர்களுடைய கொள்கைகளை எங்கள் கொள்கைகளாக கூற முடியாது. சமூக நீதி பற்றிய விரிவான பார்வை அதிமுக கட்சிக்கு உள்ளது.

ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு; கல்வி துறை அதிரடி உத்தரவு!

ஒன்பது மாதங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ரகசிய மந்திரம் இருக்கிறது என கூறிய உதயநிதி தற்போது துபாயில் இருக்கிறார். ஒற்றை செங்கலை கையில் வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராகத்தான் என உதயநிதி கூறினார்.

உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கும் போது எப்படி நீங்கள் அதை செய்வீர்கள்? என கேட்டதற்கு எங்களிடம் ரகசிய திட்டம் இருக்கிறது என கூறிய உதயநிதி இப்போது எங்கே இருக்கிறார்? அப்போது தெரியவில்லையா? ஆளுநர் ஒருவர் இருக்கிறார்.

நன்றி மறந்த உதயநிதி ஸ்டாலின்; முஸ்லிம்கள் போர்க்கொடி!

அவருக்கு எதையும் திருப்பி அனுப்ப முடியும் என்ற அதிகாரம் உள்ளது, என்று தெரியாதா? இல்லாத விஷயங்களை இருப்பதாக கூறி எல்லாரையும் ஏமாற்றிய திமுக அரசு தற்போது ஏமாந்து நிற்கிறது.

நீட் தேர்வை பொறுத்தவரை திமுகவின் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கான பயிற்சி மையத்தை மீண்டும் தொடங்குங்கள். முடிந்தால் 7.5% இட ஒதுக்கீடு முடிந்தால் 12.5% அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். அதில், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் கொண்டு வாருங்கள். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.