'லிப்லாக்' சாதாரண விஷயமல்ல – மனம் திறந்த இதயராணி!

2018ம் ஆண்டில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.  இந்த படத்திற்கு பின் இவர் ஹரிஷ் கல்யாணுடன் (Harish Kalyan) இணைந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.  இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்.  இவர் நடித்த இரண்டு படங்களிலும் இவர் இடம்பெற்ற பாடல்கள் யாவும் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

ALSO READ | நீங்கள் வெர்ஜினா? ரசிகரின் கேள்விக்கு யாஷிகாவின் வேற லெவல் பதில்!

கடந்த 2019-ல் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா, மா.கா.பா.ஆனந்த், பாலா சரவணன், சுரேஷ், பொன்வன்னன்,  லிசி ஆண்டனி, வர்கீஸ் மாத்யூ, கார்த்திக் ராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர்.  வேலை இல்லாத இளைஞன் வசதி படைத்த பெண்ணை காதலித்து அதில் ஏற்படும் இன்னல்களை சமாளித்து இறுதியில் தனது காதலியுடன் சேர்கிறானா என்பது தான் படத்தின் கதை.

Shilpa

இந்நிலையில் இவர் முன்னர் அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் படிக்கும்பொழுது ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) யார் என்றே எனக்கு தெரியாது, அவரை நான் பிக்பாஸில் சரியாக கவனிக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.  மேலும் விஜய் சேதுபதி என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியதை நான் அறிந்தேன், ஆனால் அவர் என்னிடம் நேராக கூறவில்லை, நான் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Shilpa

அதனைத்தொடர்ந்து லிப்லாக் குறித்து அவர் கூறுகையில், எனக்கு லிப்லாக் செய்வதில் கொஞ்சம் கூட ஆரம்பத்தில் விருப்பம் இல்லை, ஷாருக்கானாகவே இருந்தாலும் லிப்லாக் பண்ணமாட்டேன் என்கிற நினைப்போடு தான் நான் இருந்தேன்.  ஆனால் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி என்னிடம் இதுகுறித்து அழகாக விளக்கினார்.  கிஸ் என்பது சாதாரண விஷயமல்ல, நீங்கள் ஒருவரை மனதார விரும்புகிறீர்கள், அவர்களிடம் உங்கள் காதலை தெளிவாக வெளிப்படுத்தி விட்டீர்கள்.  அதையும் தாண்டி உங்களது அளவுகடந்த காதலை அவரிடம் தெரிவிப்பது அல்லது வெளிப்படுத்தும் விதம் தான் கிஸ் பண்ணுவது என்று கூறியுள்ளார்.  

இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  நன்கு தமிழ் பேசும் இவருக்கு சினிமாவில் டப்பிங் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ALSO READ | நடிகர் சித்தார்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.