வேலூரில் பாமக வேட்பாளர் கடத்தல்? – திமுக மீது பாயும் ராமதாஸ்!

வேலூர் மாநகராட்சி 8-வது வாரடில் திமுக சார்பில் சுனில் குமார், அதிமுக சார்பில் சுரேஷ்குமார், பா.ம.க சார்பில் நாயுடு பாபு (எ) ராமச்சந்திரன், பா.ஜ.க சார்பில் ராஜா தியாகராஜன், உட்பட்ட 6 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேரின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டு சுனில்குமாரின் மனு மட்டும் ஏற்கப்பட்டது.

இதனால், திமுக வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். வேலூர் மாநகராட்சி தேர்தலில் முதல்முறையாக ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி நந்தகுமார் ஆகியோரை சுனில் குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நான்தான்டா மாரியாத்தா வந்துருக்கேன்… வைரலாகும் 25 வயது இளைஞர்!

இந்நிலையில்,
பாமக
நிறுவனர்
ராமதாஸ்
தனது டிவிட்டர் பக்கத்தில் திமுகவை குற்றம்சாட்டி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் “வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக,
பாட்டாளி மக்கள் கட்சி
வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.