சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜனுக்கு 4 ரூபாய் பேடிஎம் மூலம் அனுப்பியுள்ளார். எதற்காக அவர் பணம் அனுப்பினார்? என தெரியாத ஹர்பஜன், அந்த ஸ்கிரீன்ஷாட்டை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், சாஹல் எதற்கு எனக்கு பணம் அனுப்பினார்? என்றும் கேள்வி எழுப்பினார்.
ALSO READ | புதிய விதிமுறைக்கு எதிராக சச்சின் போர்க்குரல்..!
இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் நாட்களில் பேடிஎம் காஷ்பேக் ஆஃபர் வழங்குகிறது. 4 ரூபாய் தனக்கு தெரிந்தவருக்கு அனுப்பினால், 100 ரூபாய் காஷ்பேக் கொடுக்கும். இந்த ஆஃபரை சாஹல் உங்களிடம் முயற்சி செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். சாஹலும், பாஜி… இது பேடிஎம் காஷ்பேக் ஆஃபர். உங்களுக்கு 4 ரூபாய் அனுப்பியதால் எனக்கு 100 ரூபாய் காஷ்பேக் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Paaji new offer hai Paytm par… Send Rs. 4 and Get Rs. 100 Cashback https://t.co/aSHnXKBKwp
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 6, 2022
சாஹலின் இந்த பதிலுக்கு ரிப்ளை செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், நான் எப்படி இந்த காஷ்பாக் ஆஃபரை பெறுவது? என கேட்டார். அதற்கு பதிலளித்த பேடிஎம், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் நாட்களில் பேடிஎம் மூலம் 4 ரூபாய் பிறருக்கு அனுப்பினால், உங்களுக்கு 100 ரூபாய் காஷ்பேக் கிடைக்கும் கெயில் எனத் தெரிவித்துள்ளது. இது பேடிஎம்மின் வித்தியாசமான விளம்பர யுக்தி என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
How can I get it bro? https://t.co/TlN5KkCRfS
— Chris Gayle (@henrygayle) February 6, 2022
ALSO READ | U-19 WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்