கொரோனா பாதிப்பு- வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்கும் துருக்கி அதிபர்

இஸ்தான்புல்:
துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இத்தகவலை எர்டோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“எனக்கும் என் மனைவிக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் தொடர்ந்து கடமையை செய்கிறோம். நாங்கள் வீட்டில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என எர்டோகன் கூறி உள்ளார்.
துருக்கியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,11,157 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தினசரி பாதிப்பு 20000 என்ற அளவில் இருந்த நிலையில், ஒமைக்ரான் மாறுபாடு வேகமாக பரவத் தொடங்கியதால், தினசரி தொற்று அதிவேகத்தில் உயர்ந்துவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.