நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அண்மையில் அதன் மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. வாடிகைகயாளர்களை வருத்தமடையச் செய்துள்ள அந்த திட்டங்களையும், அந்த திட்டங்கள் கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.
Jio ரூ.186 திட்டம்
ஜியோவின் 186 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டம், ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் -களை கொடுக்கிறது. ஜியோ வழங்கும் சில கூடுதலான சந்தாக்களும் இந்த திட்டத்தில் இலவசமாக பெறலாம். இந்த திட்டம் விலையேற்றத்துக்கு முன்பு 155 ரூபாயாக இருந்தது. இப்போது 186 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ALSO READ | பிரமாண்டமான டிஸ்பிளே கொண்ட இந்த 5G Smartphone அறிமுகம்
Jio ரூ.222 திட்டம்
ஜியோவின் இந்த ப்ரீப்பெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் -களை கொடுக்கிறது. கூடுதலாக ஜியோவின் அன்லிமிட்டெட் சந்தாக்கள் வழங்கப்படும். விலையேற்றத்துக்கு முன்பாக இந்த சலுகைகள் அனைத்தும் 186 ரூபாய்க்கு கிடைத்தது.
Jio ரூ.899 திட்டம்
336 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். மற்ற பிளான்களில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அல்லது 2 ஜிபி டேட்டா கிடைக்கும் நிலையில், இந்த திட்டத்தில் மாதம் முழுவதும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இவை தவிர, அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் -களை அனுப்பிக் கொள்ளலாம். கூடுதலாக ஜியோவின் அன்லிமிட்டெட் சந்தாக்கள் வழங்கப்படும். விலையேற்றத்துக்கு முன்பாக இந்த சலுகைகள் அனைத்தும் 749 ரூபாய்க்கு கிடைத்தது.
ALSO READ | Flipkart Sale 2022: Smartphones முதல் Laptops வரை, இவையே விற்பனையின் Best Deal