அருணாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவு…ரோந்து சென்ற 7 ராணுவ வீரர்கள் மாயம் – தேடும்பணி தீவிரம்

அருணாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவு…ரோந்து சென்ற 7 ராணுவ வீரர்கள் மாயம் – தேடும்பணி தீவிரம்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவுடன் அப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுவதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Avalanche hits in Arunachal Pradesh; 7 Army personnel missing

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக திங்களன்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கமெங் செக்டாரின் உயரமான பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராணுவம் விமானம் மூலம் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்புக் குழுக்களை ராணுவம் அனுப்பி வைத்துள்ளது. பனிச்சரிவில் சிக்கி புதையுண்டு போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அருணாச்சல பிரதேச இளைஞரை கடத்தி கரண்ட் ஷாக் கொடுத்து சீன ராணுவம் அட்டூழியம்!அருணாச்சல பிரதேச இளைஞரை கடத்தி கரண்ட் ஷாக் கொடுத்து சீன ராணுவம் அட்டூழியம்!

English summary
It has been reported that 7 Indian soldiers were trapped in an avalanche in the Kameng area of Arunachal Pradesh. Soldiers were trapped in an avalanche while patrolling the mountains. The search for them has intensified.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.