உதயநிதிக்கும் சபரீசனுக்கும் என்ன பிரச்சினை? பற்ற வைத்த மாஜி அமைச்சர்!

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் அதிரடியான கருத்துகளை தெரிவிப்பதில் பெயர் பெற்றவர்
சி.வி.சண்முகம்
.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ள சி.வி.சண்முகம், திண்டிவனத்தில் நேற்று பேசும் போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார்.

“திமுக ஆட்சி என்பது இன்னும் மூன்றறை வருடம் தான், அதுவும் நிச்சயமில்லை. நாளை என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். ஏனெனில், தற்போது திமுகவில் குடும்ப அதிகார போட்டி கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒற்றுமையா இருக்கிற மாதிரி தெரியுது, ஆனா இல்ல. மாமா, மருமகன், மச்சான் சண்டை உச்சத்தில் இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை… யாரு வசூல் பாக்குறது இந்த ஆட்சியில என்றுதான்.

ஆர்.என்.ரவி ஏன் திருப்பி அனுப்பினார்? ஓ இதுதான் காரணமா!

இப்போது மருமகன் வசூல் பார்க்க, பிள்ளையோ… நானும் பார்ப்பேன் என்கிறார். இந்த உச்சக்கட்ட சண்டை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம், ஆட்சி களையலாம், கட்சி உடையெல்லாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, அதிகாரிகள், ஜனநாயக கடமைகளை முறையாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்று பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும், மருமகன் சபரீசனுக்கும் இடையே மனஸ்தாபம் நிலவுவதாகவும், அதுவே விரைவில் மோதலாக வெடிக்கும் என சி.வி.சண்முகம் குறிப்பிட்டுள்ளதாக திண்டிவன வட்டார அதிமுகவினர் கூறுகின்றனர்.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்தும் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். “அ.தி.மு.க, எந்த நிலையிலும் தைரியமாக தனியாக இருப்பதற்கு தயாராக இருக்கும். இப்போது உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள் எல்லோரும். அது ஏன் என உங்களுக்கே தெரியும். அ.தி.மு.க ஒரு வாரமாக உற்சாகமாக இருக்கிறது. பெரிய பாரம் நம்மை விட்டு குறைஞ்சிருக்கு. யாரோ செய்த தவறுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருந்தோம். இப்போது அது இல்ல, விலகிடுச்சி.

நீட் விவகாரம்: திமுக அரசுக்கு என்னென்ன சட்ட வாய்ப்புகள் உள்ளன?

அந்த பழியிலிருந்து நாம் விலகிட்டோம். ஆகவே, தொண்டர்களில் இருந்து தலைவர்கள் வரை உற்சாகமாக, தெம்பாக, நம்பிக்கையாக இருக்கிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.