உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்!

உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை  பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட் (Morning Consult) வெளியிட்ட உலகளாவிய தலைவர்களின் தரவரிசைப் பட்டியலில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) போன்ற உலகத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி, பிரதமர் மோடி அதிக மதிப்பீட்டைப் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

முதல் 13 உலகத் தலைவர்களின் பட்டியலில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (Joe Biden) 41 சதவீத மதிப்பீட்டில் ஆறாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் 41 சதவீதத்துடன் எட்டாவது இடத்தையும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

குளோபல் லீடர் அப்ரூவல் தரவரிசைப் பட்டியலின்படி, 13 உலகத் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்திலும், மெக்சிகோ அதிபர் ஒப்ரடோர் 64 சதவீதமும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 57 சதவீதமும், ஃபுமியோ கிஷிடா 47 சதவீதமும், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் 47 சதவீதமும்  பெற்றுள்ளனர் உள்ளனர்.

ALSO READ | பதவியை காப்பாற்றும் முயற்சி; புதிய அதிகாரிகளை நியமிக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் 41 சதவீத மதிப்பீடுகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 37 சதவீதமும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 35 சதவீதமும் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் போரிஸ் ஜான்சன் மிகக்குறைந்த சதவிகித மதிப்பீகளை பெற்றுள்ளார்.

மற்ற அனைத்து உலகத் தலைவர்களையும் விட அதிக வித்தியாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்தது இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.