காஷ்மீர் விகாரம் தொடர்பாக ஹூண்டாய் டீலரின் சமூக வலைத்தளப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ஹூண்டாய் டீலர் ஒருவர் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாகக் காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகக் காஷ்மீரில் (Kashmir) பிப்ரவரி 5ஆம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பாகிஸ்தான் டீலர் ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீர் தற்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு ஆதரவாக இருப்போம் என்றும் பதிவிட்டிருந்தனர். இது மிகப் பெரியளவில் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக Boycott Hyundai என்ற ஹேஷ்டேக்கும் இந்தியாவில் இருந்து ட்விட்டரில் டிரெண்டானது.
ALSO READ | கார் விலையை உயர்த்தியது Tata Motors! புதிய விலை என்ன
இந்த நிலையில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், Hyundai பிராண்டின் இரண்டாவது வீடு இந்தியா. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் இந்திய சந்தையில் உறுதியுடன் இருக்கிறோம் மற்றும் வலுவான தேசிய உணர்வுடன் உறுதியாக நிற்கிறோம். சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு, நாட்டிற்கான எங்கள் இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் சேவையைத் தொடர்ந்து அளித்து வருகிறோம்.
Official Statement from Hyundai Motor India Ltd.#Hyundai #HyundaiIndia pic.twitter.com/dDsdFXbaOd
— Hyundai India (@HyundaiIndia) February 6, 2022
இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இது போன்ற செயல்களுக்கு எதிராக நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனம் ஹூண்டாய். உலகின் பல நாடுகளிலும் சந்தையைக் கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் மாருதி நிறுவனத்துக்கு அடுத்து 2ஆம் இடத்தில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டிலும் இந்தியா கார் விற்பனையை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஹூண்டாய், மாருதியின் மார்க்கெட்டை காலி பண்ண வரும் Tiago..!