தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு – தேர்தலுக்கு பிறகு அறிவிப்பு?

தமிழகத்தில், நகர்ப்
புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை
தமிழக அரசு
தளர்த்தி உள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடும் என்றும் ஒருசில அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்ற புதிய வைரஸ் தொற்றும், ஒமைக்ரான் தொற்றின் திரிபான பிஏ 2 வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இரண்டு வைரஸ் தொற்றுகளும் அபாயகரமானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு – கலக்கத்தில் உடன்பிறப்புகள்!

நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், தேர்தல் பரப்புரைக்காக அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவது என்பது கேள்விக்குறியே.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே ஊரடங்கில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.