படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக மீனவர்கள் தமிழக, ஒன்றிய அரசிடம் கோரிக்கை

ராமநாதபுரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்தததாக கூறி தமிழக மீனவர்களிடமிருந்து 105 நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின.இந்த நிலையில் இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. 105 படகுகளில் முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஏலம் விடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இன்று 65 படகுகள் ஏலம் முடிந்ததும் அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வருகிற 11-ந்தேதிக்குள் மீதம் உள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமலும், தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமலும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.