பீஸ்ட் முதல் பாடல்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் (Beast) படத்தில் இருந்து முதல் பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தை திரையில் கண்டு மகிழ ரசிகர்கள் பலரும் அதிக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.  சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர். 

ALSO READ | விஜயுடன் 3வது முறையாக மோதும் சிம்பு..! பீஸ்ட் VS வெந்து தணிந்தது காடு

இப்படத்தின் மாஸான போஸ்டர்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் போஸ்டர்கள் பல ரசிகர்களின் வால்பேப்பரில் ஜொலித்து வருகிறது.  ஒவ்வொரு படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளிவர வெளிவர விஜய் ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படம் குறித்த ரிலீஸ் அப்டேட் வரவில்லையே என்று #BeastUpdate ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கானது. 

beast

அதனைத்தொடர்ந்து படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  மேலும் அனிருத் (Aniruth) இசை அமைத்து இருக்கும் பாடல்கள் குறித்து ரசிகர்கள் பலரும் பாடல் அப்டேட்டை வெகு நாட்களாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.  இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதியிருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மேலும் இன்று மாலை 6 மணியளவில் ‘பீஸ்ட்’ படம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. 

best

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசித்து கொண்டிருந்தனர்.  அந்த வகையில் அறிவித்தபடியே இன்று படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  வெளியான இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகமடைய செய்யும் விதமாக அமைந்துள்ளது.  அனிருத், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் முதல் சிங்கிள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு ‘அரபிக்-குத்து’ என்ற முதல் சிங்கிளை உருவாக்கலாம் என்று கூறுகின்றனர்.  பின்னர் இதுகுறித்து விஜயிடம் கேட்க அவரும் நகைச்சுவையாக பேசுகிறார்.  அரபிக்-குத்து பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார், இந்த வித்தியாசமான முதல் சிங்கிள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று நம்பப்படுகிறது.  இவர்களின் இந்த நகைச்சுவையான உரையாடலும் பார்ப்பவர்களை ரசிக்க செய்து இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.