பொல்லார்டின் பிளானில் சிக்காமல் தப்பிய சூரியகுமார் யாதவ்!

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அமைதியான, கடைசி வரை நின்று விளையாடினார் சூர்யகுமார் யாதவ் (Suryakumar yadav). இவர் 36 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 28 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 177 ரன்களை அடித்து வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 

ALSO READ | ஹர்பஜனை புலம்ப வைத்த சாஹல்..! காரணம் இதுதான்

போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் போட்டியின் நடுவில் பேட்டிங் செய்தபோது தன்னிடம் பேசியதை கூறியுள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர்.  பொல்லார்ட் தன்னிடம் ஐபிஎல்லில் விளையாடுவது போல் ஃபிளிக் ஷாட்டை ஏன் விளையாடவில்லை என்று கேட்டதாக சூரியகுமார் கூறினார்.

“பொல்லார்ட் என்னிடம் சில விஷயங்களைச் சொன்னார். மிட்விக்கெட் ஓப்பனாக இருந்தது, ஐபிஎல்லில் செய்வது போல் ஏன் அங்கு அடிக்கவில்லை என்று கேட்டார்.  ஆனால் நான் கடைசி வரை அவுட் ஆகாமல் இருக்க விரும்பினேன்.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.  அந்த போட்டியில் நான் பாதியில் அவுட் ஆனேன், அதே தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை” என்று கூறினார்.  

surya

முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர்.  ரோஹித் 60 ரன்களில் எடுத்த நிலையில் அவுட் ஆகா, பின்னர் விராட் கோலியும் 8 ரன்களில் வெளியேற சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது. இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பன்ட்யும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்தியாவுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைபட்ட நிலையில் சூர்யகுமார் மற்றும் தீபக் ஹூடா இணைந்து சிறப்பாக விளையாடினர்.  இவர்கள் ஐந்தாவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்ந்து இந்தியாவை வெற்றி பெற செய்தனர்.  ஹூடா 32 பந்துகளில் 26* ரன்கள் விளாசினார்.  இந்தியாவின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினர். சாஹல் 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சுந்தர் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர்.

ALSO READ | ’மோதல்..நீக்கம்..’ தீபக்ஹூடா இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.