மாறன் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாறன்’ (Maaran).  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், மகேந்திரன், அமீர், பிரவீன், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  ‘தொடரி’, ‘பட்டாஸ்’ போன்ற படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷின் மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  

ALSO READ | பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!

இப்படத்தின் மூலம் தனுஷுடன் (Actor Dhanush) இணைந்து ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.  இப்படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில், தனுஷ் ஒரு கையில் பேனாவையும், மற்றொரு கையால் ஒருவரை அடிப்பது போன்றும் காட்சி இடம்பெற்று இருந்தது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

maaran 

தொடர்ந்து சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் நடிப்பு மட்டுமல்லாது, பாடகராகவும் களமிறங்கி இவர் படங்கள் மட்டுமல்லாது, மற்ற சில நடிகரின் படங்களிலும் பாடியுள்ளார்.  அந்த வகையில் இந்த படத்திலும் இவர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ஒரு பாடலை பாடியுள்ளார்.  இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த படம் திரையரங்கிற்கு வராமல் நேரடியாக Disney Plus Hotstar-ல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.  இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி நேரடியாக Disney Plus Hotstar இயங்குதளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான atrangi re படமும் நேரடியாக OTT-யில் வெளியானது.  அடுத்ததாக Gray Man படமும் Netflixயில் வெளியாக உள்ளது.

ALSO READ | ஹிந்தியில் கொடி பறக்கவிடும் தனுஷ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.