லதா மங்கேஷ்கர் உடல் மீது எச்சில் துப்பினாரா ஷாருக்கான்! – நடந்தது என்ன?

லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலத்தில் ஷாருக்கான் துவா செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா நேற்று காலமானார். 

அவரின் இறுதிச் சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என மகாராஷ்டிரா அறிவித்தது. மத்திய அரசு சார்பில் 2 நாள் நாடு முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழின் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar) மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

ALSO READ | லதா மங்கேஷ்கர் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?

மும்பையின் சிவாஜி பார்க் மைதானத்தில் லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார். மேலும் லதா மங்கேஷ்கரின் உடல் மீது அவர் மலர் வளையம் வைத்ததுடன், அவரின் காலை தொட்டு கும்பிட்டு, சுற்றி வந்தார். பின்னர் லதாவின் உடலுக்கு முன்பு நின்று துவா செய்து பின் தன் மாஸ்க்கை நீக்கிவிட்டு ஊதினார்.

அவர் துவா செய்து ஊதியதை பார்த்தவர்கள் ஷாருக்கான் லதா மங்கேஷ்கரின் உடலில் துப்பிவிட்டதாக பேசத் துவங்கிவிட்டனர். ஷாருக்கான் துவா செய்ய, பூஜா கும்பிட அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.

இதற்கிடையில் அந்த புகைப்படத்தில் ஷாருக்கான் அருகில் நின்றது அவரின் மனைவி கௌரி என பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள். மேலும் அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது. 

ALSO READ | பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.