விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம்!

தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் (Vijay makkal iyakkam) போட்டியிட உள்ளனர்.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய இவர்கள் இந்த தேர்தலிலும் வெற்றி வாகை சூட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இவர்கள் தங்கள் கட்சிக்கு பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ALSO READ | விஜய் ரசிகர்கள் அமர்க்களம் – மேள தாளங்கள் முழங்க வேட்புமனு தாக்கல்…!

ஆனால் விஜய் (Vijay) மக்கள் இயக்கத்தினர் முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை வழங்க மறுத்துவிட்டது.  இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.  கடந்த வாரம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், பொது சின்னமாக ஆட்டோ சின்னம் கேட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்க இயலாது என்று தெரிவித்ததன் அடிப்படையில் ஆங்காங்கே போட்டியிடும் வேட்பாளர்கள் ஆட்டோ சின்னத்தை  கேட்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

vmi

இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையத்திலிருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு ஆட்டோ சின்னம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் தளபதி விஜய் நமக்கு ஆட்டோ சின்னம் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்வார் என்று தெரிவித்திருந்தார், தற்போது சிலருக்கு இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் பேட்டியிட்டு எதிர்பார்க்காத வெற்றியை பெற்றதுபோல் உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெறுமா? என எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

ALSO READ | விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.