பெண்ணுக்கு காத்திருந்த ஷாக் – iPhone 13 Pro Maxக்கு பதிலாக பார்சலில் வந்த பொருள்!

பொதுவாக ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஒரு பொருளுக்கு பதிலாக விலை குறைந்த வேறு பொருள்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான பொருள்களை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும் இவர்களுக்கு இது போன்ற சூழல்கள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழக்கவும் செய்கிறது.

இது ஒருபுறம் இருக்க விலை உயர்ந்த பொருள்களை ஆர்டர் செய்யும் சிலருக்கு, சொர்ப்ப விலையுள்ள பொருள்கள் டெலிவரி செய்யப்படுகிறது. உலகளவில் இது தொடர்பான பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

spam call blocker: வெறுப்பேத்தும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து தப்ப வேண்டுமா… உங்களுக்காக உதவும் செயலிகள்!

இந்த நிலையில், தற்போதும் இதே போன்ற ஒரு சம்பவம் லண்டனின் நடந்துள்ளது. ஆம், சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்
(
iPhone 13 Pro Max
) ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்தவருக்கு, சோப்பு டப்பா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

லண்டனைச் சேர்ந்த 32 வயதான கௌலா லாஃபிலி (Khaoula Lafhaily) என்ற பெண், ஜனவரி 24ஆம் தேதி Sky Mobile தளத்தில் இருந்து தனது வடக்கு லண்டன் வீட்டு முகவரிக்கு ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அவர் முன்பணமாக இந்திய மதிப்பில் சுமார் 12,500 ரூபாயைச் (£150) செலுத்தி, 36 மாத தவணைத் திட்டத்தில் சேர்ந்துள்ளார். மொத்த தவணைத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 30ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

ஆர்டர் செய்துவிட்டு ஐபோனுக்காக காத்திருந்த கெளலாவுக்கும் ஸ்கை மொபைல் தளத்தில் இருந்து, இன்னும் இரண்டு நாள்களில் ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. குஷியில் இருந்த கெளலாவுக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஐபோன் டெலிவரிக்கான பார்சல் கிடைத்துள்ளது.

ஐபோனுக்கு பதிலாக சோப்பு டப்பா (soap bottle for iPhone 13 Pro Max)

முகம் முழுக்க புன்னகையுடன் பார்சலைத் திறந்து பார்ந்த மெளலாவுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. அப்படி என்ன அதிர்ச்சி என்று நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம். உங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், சுமார் ரூ.1,30,000 மதிப்பில் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோனுக்கு பதிலாக, சோப்பு டப்பா மெளலாவுக்குக் கிடைத்துள்ளது.

2022 இல் ஆண்ட்ராய்டு போனுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை?

இதுகுறித்து உடனடியாக நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார் மெளலா. பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பார்சல் நிறுவனம், 7 நாள்கள் ஆனப் பிறகும், இன்னும் தன்னைத் தொடர்புகொள்ளவில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட பெண் மெளலா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். உடனடியாக சோப்புப் டப்பாவுக்கு பதிலாக, தனது ஐபோனை கொடுக்கும்படி மெளலா பார்சல் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

தொடரும் டெலிவரி பிரச்னை

இதேபோன்று, கடந்த ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவரும் தனக்கான ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை தேர்வு செய்து சுமார் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தார். தனக்கு பிடித்த மொபைலை காண ஆவலுடன் காத்திருந்த டேனியலுக்கு, பார்சலில் டெலிவரி செய்யப்பட்டது இரண்டு கேட்பரி ஒயிட் ஓரியோ சாக்லேட்டுகள்.

kisan credit card: கிசான் கிரெடிட் கார்டு உடனே பெறுவது எப்படி… 4% மலிவு வட்டியில் கடன்!

இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்து, சில நாள்கள் கழித்து தனது மொபைல டேனியல் பெற்றுக்கொண்டார். ஆன்லைனில் பொருள்களை குறைந்த விலையில் வாங்குவது நல்லது தான். ஆனால், எப்போதும் விற்பனையாளரின் நம்பகத்தன்மை சோதித்து பார்ப்பது மிக அவசியமானதாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.