US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

மாஸ்கோவுடனான உக்ரைன் மோதல்  வலுத்து வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு 3,000 கூடுதல் வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஆனால்,  ரஷ்யாவுடன் போரைத் தொடங்குவதற்காக இந்த துருப்புக்களை அனுப்பவில்லை என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

“உக்ரேனில் போரைத் தொடங்கவோ அல்லது ரஷ்யாவுடன் போரிடவோ அமெரிக்கா படைகளை அனுப்பவில்லை என்பதை அமெரிக்க அதிபர் பல மாதங்களாக தெளிவாகக் கூறி வருகிறார்” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஃபாக்ஸ் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

“நேட்டோ பிரதேசத்தை பாதுகாக்க நாங்கள் ஐரோப்பாவிற்கு படைகளை அனுப்பியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்ததால் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிற்கும் மேற்குலகிற்கும் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளது.

ரஷ்யா 100,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை எல்லையில் குவித்துள்ளது. பெலாரஸுக்கும் ரஷ்யா (Soviet Union) படைகளை அனுப்பியுள்ளது எனபது மூன்றாம் உலகப்போர் மூழுமோ என்ற அச்சங்களை அதிகரித்துள்ளது.

“உக்ரைனின் ராணுவ விரிவாக்கம் மற்றும் படையெடுப்பு எந்த நேரத்திலும் நிகழலாம். உக்ரைனில் ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திறன்களை ரஷ்யர்கள் வைத்துள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம், இதற்கு தக்க பதிலடி கொடுக்க கடுமையாக உழைத்து வருகிறோம்,” என்று என்பிசியின் மீட் தி பிரஸ்ஸில் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.

ALSO READ | சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியா ஆலோசனை

“அதிபர் ஜோ பிடென் கூட்டாளிகளை அணிதிரட்டினார். அவர் கிழக்குப் பகுதியில் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை ஒன்றிணைத்து உக்ரேனியர்களுக்கு ஆதரவை வழங்கினார்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ரஷ்யாவுடனான (Soviet Union) அதிகரித்து வரும் பதட்டங்களை  தீர்க்கும் வாய்ப்பு, இராஜதந்திரத்தின் மூலம் இருக்கும் என்றும், அதன் சதவிகிதம் ரஷ்யாவுடன் மோதிப் பார்ப்பதை விட அதிகமானதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எல்லையில் குவிக்கப்பட்ட ரஷ்யப் படை ஒரு சில வாரங்களுக்குள் உக்ரனை ஆக்ரமிப்பதற்குக் தேவையான வகையில் வளர்ந்து வருவதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதன் பின்னணியில், அமெரிக்காவின் விளக்கம் வந்துள்ளது.

உக்ரைனின் ரஷ்ய-சார்பு டான்பாஸ் பகுதியில் வரையறுக்கப்பட்ட பிரச்சாரம் முதல் முழு அளவிலான படையெடுப்பு வரையிலான விருப்பங்களை புடின் வைத்திருப்பதாக அவர்கள் கூறினர்.

ஆனால் உக்ரைனுக்குள் ஊடுருவத் திட்டமிடுவதாக வரும் செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது.

ALSO READ | இந்த நாடுகளில் மட்டும் மனிதர்கள் நூறாண்டு வாழும் ரகசியம் என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.