குரும்பாச்சி மலையில் சிக்கிய இளைஞர் – 28 மணி நேரமாக தொடரும் மீட்பு முயற்சி

சேரட்டைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து குரும்பாச்சி மலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார். அவர்கள் கீழே இறக்கும்போது தவறி விழுந்த பாபு, செங்குத்து பாறை ஒன்றின் குகைக்குள் சென்று சிக்கிக்கொண்டார். அவரை மீட்க குச்சி, கயிறு உள்ளிட்டவைகளைக் கொண்டு அவரது நண்பர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. உடனடியாக கீழே சென்ற அவர்கள், காவல்துறையிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

`மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரை மீட்க, எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இரவு நேரம் என்பதால் மீட்பு முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டு காலையில் தொடங்கியது. இதில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் கொச்சியில் இருந்து கடலோர காவல்படை ஹெலிக்காப்டர் வரவழைக்கப்பட்டது. ஹெலிக்காப்டர் மூலம் கயிறை கொடுத்து பாபுவை மீட்க முயன்றனர். 

அந்த கயிறு பாபுவுக்கு எட்டவில்லை. தொடர் முயற்சிகள் பலனளிக்காமல் மீட்பு முயற்சி ஒருநாளை எட்டியதையடுத்து, இந்திய ராணுவத்தின் உதவியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரினார். இதனடிப்படையில் ராணுவத்தினர் மீட்பு பணிக்காக விரைந்துள்ளனர். இதற்கிடையே, மலையில் சிக்கியிருக்கும் இளைஞருக்கு உணவு, தண்ணீர் கொடுக்க முயற்சி எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க  | ஹூண்டாய் விவகாரம்: தென் கொரிய தூதரிடம் வலுவான கண்டனத்தை பதிவு செய்த இந்தியா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.