குறைவான EMI-யில் மாருதி பலேனோ -வை சொந்தமாக்குங்கள்..!

கார் துறையில் ஹேட்பேக் பிரிவு கார்கள் குறைந்த பட்ஜெட்டில் இருக்கும் மைலேஜ் கார்களாக அறியப்படுகிறது. இந்த பிரிவில் இருக்கும் சில கார்கள் பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டி வடிவமைப்புகளுக்காக வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதில் ஒன்று மாருதி பலேனோ. பிரீமியம் வடிவமைப்பு மற்றும் அம்சங்களுக்காக விரும்பப்படும் ஹேட்ச்பேக் செக்மென்ட் காரான இது, அந்த நிறுவனத்தின் பிரபலமான காராகவும் உள்ளது.

மேலும் படிக்க | காதலர் தின பரிசு: Flipkart-Amazon இல் கேஷ்பேக் பெறுங்கள்

மாருதி பலேனோவின் டெல்டா வேரியன்ட் சிறந்த விற்பனையான வேரியண்ட் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 7,01,000 ஆகும். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஒரேயடியாக செலுத்தாமல், முன்பணம் செலுத்தி இ.எம்.ஐ மூலம் மிக எளிதாக இந்த காரை வாங்கலாம். இந்தக் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளருக்கு, மாருதியுடன் தொடர்புடைய வங்கி மூலம் சுமார் ரூ.7,09,717 கடனாக பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

கார் வாங்கும் வாடிக்கையாளர் முன்பணமாக குறைந்தபட்சம் ரூ.79 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.15,010 மாதாந்திர இஎம்ஐ செலுத்த வேண்டும். அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை இ.எம்.ஐ செலுத்தும் காலம் வங்கிகள் கொடுக்கின்றன. இந்தக் காரைப் பொறுத்தவரை, 1197 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 81.80 பிஎச்பி பவரையும், 113 என்எம் பீக் டார்க் திறனையும் உருவாக்குகிறது, இதனுடன் மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாருதி பலேனோ லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜ் தருவதாக மாருதி கூறுகிறது.

மேலும் படிக்க  | மேலும் படிக்க | ரூ. 75,000 ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 25,000-க்கு வாங்க சூப்பர் வாய்ப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.