ஐ.பி.எல் போட்டி குறித்து பேசிய கேரள இளம் வீரர் சச்சின் பேபி, “ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு என்னையும் சஞ்சு சாம்சனையும் அழைத்துச் சென்றது ஸ்ரீ சாந்த் தான். சஞ்சு, என்னையும் சேர்த்து ஆறு பேரை ராயல்ஸ் அணி தேர்வுக்கு அழைத்துச் சென்றார். விமான டிக்கெட் உட்பட அனைத்தையும் ஸ்ரீ எடுத்துச் சென்றார். தற்போது எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. இன்றும் அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தடை இருந்தபோதிலும், அவர் தனது கிரிக்கெட் பயிற்சியை நிறுத்தவில்லை” என்று சச்சின் பேபி தெரிவித்தார்.
மேலும் படிக்க | மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?
சஞ்சு சாம்சனைப் பற்றி பேசும்போது, ” இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்பது சஞ்சு சாம்சனின் கனவு. வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியில் விளையாடியது மறக்க முடியாத அனுபவம். அந்த அணியில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. 2016 ஆம் ஆண்டை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. கிறிஸ் கெயிலுக்கு கேரளா மிகவும் பிடித்திருந்தது.
விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆக்ரோஷமாக அவர் செயல்படுவது, அனைவருக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். அவர் களத்தில் செயல்படுவதை வைத்து அவரை தவறாக பலர் எடைபோடுகின்றனர். விராட் மீது வெறுப்பை தூவுகின்றனர். எங்களைப் போன்ற இளம் வீரர்களுக்கு விராட் போன்ற அணுகுமுறை தேவை என நினைக்கிறேன்” சச்சின் பேபி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீசாந்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | மும்பை அணி இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுத்த 5 வீரர்கள்