’ஜெய்பீம்’ கானல்நீரான ஆஸ்கர் கனவு – ரசிகர்கள் ஏமாற்றம்

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’ (Jai bhim), கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா (Actor Suriya) இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ (Jai Bhim) திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

ALSO READ | ஆஸ்காரின் யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது. அதேபோல் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது. 

இதற்கிடையில் சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் (Oscar Award) அதிகாரபூர்வ யூ-டியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. அதன்படி ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றது. இன்று வெளியிடப்படும் இறுதிப் பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஆஸ்கர் கமிட்டி சார்பில் பிப்ரவரி 8 ஆம் தேதியில் ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடலில், ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவரான ஜாக்குலின் கோலே ‘சிறந்த படத்துக்கான பரிந்துரையில் ‘ஜெய் பீம்’  இடம்பெறும் என தெரிவித்திருந்ததார். ஆனால், இன்று மாலை வெளியான இறுதிப் பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெறவில்லை. இது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

ALSO READ | எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.