“டமார்” என வெடித்த பூசல்.. மம்தா Vs பிகே.. பிரசாந்த் கிஷோருக்கு எதிராக தீதீ ஆவேசம்.. என்ன நடந்தது?
கொல்கத்தா: பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த 8 வருட காலமாகவே மத்தியில் தக்க வைத்துக் கொண்ட பாஜக,மிக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது… ஆனால் இந்த கட்சியை எதிர்க்க, காங்கிரஸ் தவறி விட்டது.. பலவீனமாகியும் விட்டது.
பலம் பொருந்திய பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், அதைவிட பலம் பொருந்திய கூட்டணி முக்கியம் என்பது தவிர்க்க முடியாத கள உண்மை.
2024 தேர்தல்.. எதிர்கட்சிகள் இதை பண்ணலைனா.. பாஜக ரிப்பீட்டு! ஐடியாக்களை அள்ளி வீசிய பிரசாந்த் கிஷோர்

மம்தா பானர்ஜி
அப்படி ஒரு பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என்றால், அப்படியான வேலையை அக்கட்சியில் யாருமே முன்னெடுக்கவில்லை.. எனினும், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மட்டுமே.. 2024-வரப்போகும் ஆண்டில் நடக்க போகும் எம்பி தேர்தலை குறிவைத்து இப்போதே களமிறங்கிவிட்டார்.

மம்தா
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.. அதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசிவருகிறார்.. ஆனால், இவ்வளவுக்கும் பக்கபலமாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இருந்து வருவதை மறுக்க முடியாது… கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்வர் ஆனார் என்றால், இதற்கு பிரசாந்த் கிஷோரின் அறிவுரைகள் முக்கிய பங்கு வகித்ததை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

ஐபேக்
சில மாதங்களுக்கு முன்பு, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் பணியிலிருந்து விலகுவதாக பிரசாந்த கிஷோர் அறிவித்திருந்தார்… ஆனால், ஐபேக் நிறுவனத்துடன், மம்தா பானர்ஜி வரும் 2026-ம் ஆண்டு வரை கூட்டணி அமைத்துவிட்டதாக மற்றொரு தகவலும் வெளியானது.. அப்படியானால், பிரசாந்த் கிஷோர் இல்லாத நிலையில், அவரது ஐபேக் நிறுவனம் எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பையும் அது ஏற்படுத்தியது.

மோதல்
இந்நிலையில்தான் மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது… அத்துடன், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.. மேற்கு வங்காளத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது… இதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது..வேட்பாளர் தேர்வு விவகாரத்தில்தான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறுபாடு வெடித்துள்ளது..

சலசலப்பு
அதனாலேயே ஐபேக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கூறும்போது, “ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக எங்களது கட்சி விவாதித்து வருகிறது” என்றார்.. ஆனால், இதை பற்றி பிகேவும் சரி, மம்தாவும் சரி, வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.. இத்தனை காலமும் மம்தாவின் வெற்றியில் பிகேவின் பங்களிப்பு நிறைந்து காணப்பட்ட நிலையில், திடீரென ஒரு விரிசல் எழுந்துள்ளது தேசிய அரசியலில் சலசலப்பையும், அதையொட்டிய எதிர்பார்ப்பையும் கூட்டி வருகிறது.