சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்பு கூட்டம் காலை 10மணிக்கு துவங்குகிறது.
தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது சட்டப்பேரவை (Tamil Nadu Legislative Assembly) அவசரமாக கூட்டப்படுகிறது.
*தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 13-ந் தேதி சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா அன்றே தமிழக ஆகுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
*நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் கடந்த 1ம் தேதி திருப்பி அனுப்பிய நிலையில் இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் மீண்டும் அந்த சட்டமுன்வடிவினை விவாதித்து, அதனை மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பப்பட உள்ளது.
ALSO READ | TN Assembly: தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டங்களின் வரலாறு