பொம்மை முதல்வர்…ஸ்டாலினை சீண்டிய இபிஎஸ்!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தன்னுடைய நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடக்கினார்.

சிவகாசிக்கு வருகை புரிந்த அவருக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் சார்பாக மாலை அணிவித்து ஆண்டாள் கிளி நினைவுப் பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்டுத்தியும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக நிர்வாகிகள் நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தில்
எடப்பாடி பழனிசாமி
பேசியது:

தமிழக மக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பேச்சுகளை பேசிதான் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறத. திமுகவின் கடந்த 8 மாத கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக அரசு காலம் தாழ்த்தியது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தற்போது தேர்தலை நடத்தப்படுகிறது.

திமுகவினர் என் கணவரை கடத்திட்டாங்க… கதறும் அதிமுக பெண் வேட்பாளர்!

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள்; ஆனால் இதுவரை செய்யவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு விடுத்து 8 மாதம் ஆகியும் வழங்கப்படவில்லை.

நகை கடன் வாங்கிய 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் என்று அறிவித்துவிட்டார்கள். அதனால் 35 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டு தற்போது கூடுதல் வட்டியை செலுத்தி வருகிறார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்தியதற்கு 35 லட்சம் பேருக்கு 12 ஆயிரம் ரூபாய் வட்டி என்பது அவர்களுக்கு தண்டனையா?

இன்றை திமுக ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதை பற்றி தான் யோசிக்கிறார்கள். பொங்கல் பரிசுத் தொகுப்பு இதற்கு சமீபத்திய உதாரணம்.

திமுகவின் 8 மாத ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. எங்கும் கொலை, கொள்ளை தான் நடக்கிறது. ஆளத் தெரியாத ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு ரோஜா கொடுத்த பரிசு!

அவர் தினமும் காலையில் 3 இடங்களுக்கு செல்கிறார். பின் அங்குள்ள கடையில் டீ குடிக்கிறார். டீ குடிப்பதற்கும், பளு தூங்குவதற்கும், சைக்கிளில் செல்வதற்குமா மக்கள் இவரை முதல்வர் ஆக்கி உள்ளனர்? முதலமைச்சர் மக்களுக்காக உழைக்காமல் சொந்த வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம். இந்த அரசிடம் நியாயம் எதிர்பார்க்க முடியாது. கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுக மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். எல்லா வழக்குகளையும் சந்திக்கும் சக்தி அதிமுகவிற்கு உண்டு.

ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்தார்களாம். அதை கேட்டு பொய் வழக்கு ஒன்றை போட்டு வைத்திருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.