மும்பை அணி இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுத்த 5 வீரர்கள்

2022 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் புதியதாக 2 அணிகள் களமிறங்க உள்ளதால், வீரர்கள் பண மழையில் நனைய உள்ளனர். யார்? யாருக்கெல்லாம்? ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பது இப்போது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?

ஐபில் லீக்கில் மிகப்பெரிய பணக்கார அணிகளாக கருத்தப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு செல்ல வேண்டும் என்பது பல வீரர்களின் கனவாக இருக்கிறது. ராஜ மரியாதை மற்றும் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் இரண்டு அணிகளுக்கும் தேர்வானால், அவர்கள் காட்டில் பணமழை தான். அந்தவகையில், கடந்த கால ஐ.பி.எல் வரலாற்றில் மும்பை அணி அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்த 5 வீரர்கள்யார்? என்பதை பார்க்கலாம். 

டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 2011 ஆம் ஆண்டு 9.2 கோடி ரூபாய் விலைக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். இதுவரை மும்பை அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் இவர். 2018 ஆம் ஆண்டு குருணால் பாண்டியாவை 8.8 கோடி ரூபாய்க்கு வாங்கிய மும்பை, 20220 ஆம் ஆண்டு நாதன் கூல்டர் நைலை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 2018 ஆம் ஆண்டு இஷான் கிஷன் 6.2 கோடி ரூபாய்க்கும், அதிரடி மன்னன் கிரன் பொல்லார்டு 5.4 கோடி ரூபாய்க்கும் மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. 

இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை அணி அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்த டாப் 5 வீர்ர்கள் இவர்கள். விரைவில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி அதிக விலை கொடுத்து யாரை வாங்கப்போகிறது? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் படிக்க | பொல்லார்டின் பிளானில் சிக்காமல் தப்பிய சூரியகுமார் யாதவ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.