மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?

நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா முதுகுவலி பிரச்சனை காரணமாக இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக விளையாடாமல் உள்ளார். ஐ.பி.எல் போட்டி மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்து வரும் அவர், அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் புதியதாக களமிறங்கும் அகமதாபாத் அணியின் கேப்டனாகவும் செயல்பட உள்ளார்.

மேலும் படிக்க | T20 WC 2022: வெளியான 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி! இந்திய அணியை கொண்டாடும் ரசிகர்கள்!

அவர் முதன்முதலாக ஐ.பி.எல் போட்டியில் அறிமுகமான அணி மும்பை இந்தியன்ஸ். அறிமுகமானது முதல் கடந்த ஆண்டு வரை அந்த அணியின் நட்சத்திர வீரராக இருந்த அவர், நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியில் ரீட்டெயின் செய்யப்படவில்லை. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரீட்டெயின் செய்யாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏலம் மூலம் மும்பை அணிக்கு திரும்பலாம் என கருதப்பட்ட நிலையில், ஐ.பி.எல் போட்டியில் புதியதாக களமிறங்கியுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏன் மும்பை அணியால் ரீட்டெயின் செய்யப்படவில்லை?, அவருக்கு மும்பை அணி நிர்ணயித்த தொகை பிடிக்கவில்லையா? என்ற கேள்விகள் பொதுவெளியில் எழுந்தன. இந்நிலையில், புதியதாக இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க விரும்பியதாகவும், அந்த தகவலை அவர் அணி நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏதேனும் சலசலப்பு ஏற்பட்டதால் அவரை மும்பை அணி ரீட்டெயின் செய்யவில்லையா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | பொல்லார்டின் பிளானில் சிக்காமல் தப்பிய சூரியகுமார் யாதவ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.