ராத்திரி நேரம்.. ஓடும் பஸ்சில், பின் சீட் வழியாக கையை விட்டு.. அதிகாரி ஒரே அட்டகாசம்.. அலறிய பெண்
கும்பகோணம்: அரசு பஸ்ஸில், முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார் ஒரு அதிகாரி.. அப்பறமென்ன? மொத்த பேரும் சேர்ந்து கும்மு கும்முவென்று கும்மியெடுத்துவிட்டனர்..!
கும்பகோணம் நோக்கி அந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.. ராத்திரி நேரம் வேறு.. ஒரு பெண் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தார்.
அவருக்கு பின்சீட்டில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து வந்துள்ளார்.. அப்போது திடீரென முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
புட்லூரில் அவசரமாக தண்டவாளத்தை கடந்த பெண்… ரயில் வடிவில் வந்த எமனால் பல பாகங்களாக சிதறிய உடல்

பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.. ஆனாலும் அந்த நபர் கண்டுகொள்ளாமல் சில்மிஷ வேலைகளில் ஈடுபட முயன்றுள்ளார்.. பிறகு, அந்த பெண் கோபமடைந்து உடனடியாக செல்போன் மூலம் தன்னுடைய சொந்தக்காரர்களுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி உள்ளார்.. அதற்குள் அந்த பெண், கண்டக்டரிடம் இதை பற்றி சொன்னார்.. கண்டக்டர் சத்தம் போட்டும் அந்த நபர் அடங்கவில்லை.. மதுபோதையில் இருந்திருக்கிறார்.

சில்மிஷம்
கண்டக்டருடன் சேர்ந்து பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகளும் சத்தம் போட்டனர்… அப்போதும் அந்த நபர் யார் பேச்சையும் கேட்கவில்லை.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த கண்டக்டர், பஸ்ஸை நிறுத்தி, அந்த நபரை கீழே இறங்குமாறு சொன்னார்.. ஆனால், அதற்கும் அந்த நபர் கீழிறங்க மறுத்தார்.. “நான் ஏன் இறங்கணும்? நான் ஒரு போலீஸ் அதிகாரி.. என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது… மரியாதையா என்னை கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிடுங்க.. நடுவழியில் இறங்க முடியாது” என்றார்.

கண்டக்டர்
இதனால் கண்டக்டருக்கு மேலும் ஆத்திரம் வந்து, கும்பகோணம் மேம்பாலம், நால்ரோடு, புதிய பஸ் ஸ்டாண்டு, மற்றும் ரயில் நிலையம் செல்லும் நான்கு வழிச் சாலையின் குறுக்கே பஸ்ஸை நிறுத்திவிட்டார்.. “கீழே இறங்கவில்லை என்றால் பஸ்ஸை எடுக்க முடியாது” என்றார் கண்டக்டர்.. பஸ்ஸில் இருந்த பயணிகளும், கூச்சல் போட ஆரம்பித்தனர்.. அதற்கு பிறகுதான் அந்த நபர் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினார்..

சில்மிஷம்
அதற்குள் பெண்ணின் சொந்தக்காரர்கள் மொத்த பேரும் திரண்டு வந்துவிட்டனர்.. பஸ்ஸில் செல்லும் பெண்ணிடம் இப்படித்தான் போதையில் நடந்து கொள்வதா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர், என்னை யாரும் இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது.. யாராவது என்னை பற்றி பேசினால், இதே பஸ்ஸுக்கு முன்னாடி உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்… யாரா இருந்தாலும் போனை போட்டு என்கிட்ட வர சொல்லு.. என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்…

வார்னிங்
இந்த கலாட்டாவினால், நான்கு வழிச்சாலையில் நீண்ட தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டது.. அதற்கு பிறகு போக்குவரத்து போலீசார் மற்றும் கும்பகோணம் மேற்கு போலீசார் விரைந்து வந்து, பைக்கில் உட்கார வைத்து கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றனர்.. அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் ஒரு அமைச்சுப் பணியாளர் என்பது தெரியவந்தது.. அதற்கு பிறகு அவரை வார்னிங் தந்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.