லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கு வாரிசு யார்?

மும்பை: காற்றின் மூலம் காதுகள் வழியாக நமது மனதை மகிழச் செய்த பாடகி லதா மங்கேஷ்கர் இன்று நம்முடன் இல்லை. காற்றில் கலந்த குயிலோசைக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கரின் வாரிசு யார் என்ற கேள்வி எழுகிறது.

இசையுலகில் லதா மங்கேஷ்கரின் வாரிசு என்று சொல்வதற்கு பலர் போட்டிப்போடலாம், அது கலைத்துறையின் உரிமை. ஆனால், இசை உலகையே தனது குரலால் மயங்கச் செய்த லதா மங்கேஷ்கரின் செல்வத்தையும், அவர் சேர்த்து வைத்த சொத்துகளுக்கும் யாருக்குக் செல்லப் போகிறது?  

இசைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இந்தியாவின் இசை மகள். இசையே குடும்பம் என்று ஆனதால், திருமணம் செய்துக் கொள்ளவில்லை. 

1942ல் தனது 13வது வயதில் இசை உலகில் கால் பதித்த லதா மங்கேஷ்கரின் காலத்தை தாண்டி நிற்கும் இசைக்கு விலையே மதிப்பிடமுடியாது.

25 ரூபாய் ஊதியத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய லதா, ஒரு பாடலுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வாங்கும் பிரபல பாடகியாக உயர்ந்தார்.

movies

எளிமையான வாழ்க்கை வாழ்ந்த லதா, புகழை மட்டும் அல்ல, ஏராளமான செல்வத்தையும் சேர்த்து வைத்தார். 

movies
லதா மங்கேஷ்கரின் சொத்துக்களின் நிகர மதிப்பு சுமார் 370 கோடி ரூபாய். அவர் மும்பையின் ஆடம்பரமான பகுதியில் பெடர் சாலையில் கட்டப்பட்ட ‘பிரபுகுஞ்ச் பவன்‘என்ற பங்களாவில் வசித்து வந்த லதா மங்கேஷ்கரின் வீடு, பல கோடி ரூபாய் மதிப்புடையது. 

அழகான புடவைகள் மற்றும் நகைகள் அணிவதில் விருப்பம் கொண்ட லதா மங்கேஷ்கருக்கு கார்களும் மிகவும் பிடித்தமானது. பல விலையுயர்ந்த கார்களும் அவரின் சொத்தாக இருக்கின்றன. 

movies

கோடிக்கணக்கான விலைமதிப்புள்ள வீடு, விலைமதிப்பற்ற நகைகள் தவிர, அவரது பாடல்களின் ராயல்டி தொகை என இப்போது இருக்கும் சொத்துக்கள், மற்றும் ராயல்டி மூலம் கிடைக்கவிருக்கும் எதிர்கால வருமானம் என அனைத்துமே யாருக்கு கிடைக்கும்?

லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் மங்கேஷ்கர் (Hridaynath Mangeshkar), கானக்குயிலின் சொத்துகளுக்கான வாரிசாக இருப்பார் என்று யூகிக்கப்பட்டாலும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

பிரபல இசைக்கலைஞர் தீனநாத் மங்கேஷ்கரின் மகனும், இந்திய இசை மேதைகளான லதா மங்கேஷ்கர் , ஆஷா போஸ்லே ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார். இவரும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இந்திய இசைக்குயில் லதா மவுனம்: உங்களுக்கே தெரியாத அரிய தகவல்கள்

ALSO READ | முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்

ALSO READ | பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.