திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதனை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவருடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
