விரைவில் வெளிவருகின்றன சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி, எங்கு பார்ப்பது?

புது டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு (டர்ம் தேர்வுகள்) முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளது. எனினும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி மற்றும் நேரத்தை வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

“தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேதிகள் உறுதிசெய்யப்பட்டதும் அது தெரிவிக்கப்படும்” என்று சிபிஎஸ்இ அதிகாரி ராம சர்மா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
 
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in -க்குச் சென்று தங்கள் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் இணைய பெட்டகம் மூலமாகவும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது மாணவர்கள் ரோல் நம்பர், பள்ளி குறியீட்டு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வாரியம் எந்த மாணவரையும் தேர்ச்சி பெற்றவர் (பாஸ்), தோல்வியுற்றவர் (ஃபெயில்) அல்லது தேர்வை திரும்ப எழுத வேண்டியவர் (எசன்ஷியல் ரிபீட்) என அறிவிக்காது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் பிராக்டிகல் மற்றும் தியரி ஆகிய இரு தேர்வுகளிலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 28 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளின் (எம்.சி.க்யூ) வடிவத்தில் நடத்தப்பட்டன.
 
மேலும் படிக்க | CBSE 12th Result 2022: ரிசல்ட் இன்று! சில முக்கிய குறிப்புகள் உள்ளே

10, 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ முதல் வருவ தேர்வு முடிவை பார்ப்பதற்கான வழிமுறைகள்: 
 
STEP 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in -ஐப் பார்வையிடவும் 
STEP 2: முகப்புப் பக்கத்தில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு முடிவு 2022 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
STEP 3:  ரோல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிற சான்றுகள் போன்ற விவரங்களை அளிக்கவும்
STEP 4: ‘லாக் இன்’ என்பதை அழுத்தவும்
STEP 5: சிபிஎஸ்இ 10வது முடிவுகள் 2022 மற்றும் சிபிஎஸ்இ 12வது முடிவுகள் 2022 திரையில் காட்டப்படும்
STEP 6: முதல் பருவ தேர்வு சிபிஎஸ்இ மதிப்பெண் தாளைப் பதிவிறக்கவும்.

மேலும் படிக்க | Cyberwall: ஹேக்கர் இணைப்புகளுக்கு சவால் விடும் சைபர்வால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.