IND vs WI: இந்திய அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல்! இளம் வீரர்களுக்கு ஆபத்து!

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி நாளை (புதன்கிழமை) இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் போது, ​​இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் துணை கேப்டன் கேஎல் ராகுலின் பேட்டிங் வரிசை மீது அனைவரின் பார்வையும் உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை 176 ரன்களுக்கு சுருட்டியது. அதன்பின் கேப்டன் ரோகித் சர்மாவின் 60 ரன்களின் உதவியுடன் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் புதுவிதமான எனர்ஜியுடன் விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் தோல்வியை மறந்து தன்னம்பிக்கையுடன் மீண்டும் காணப்பட்டது. கால் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கு செல்ல முடியாத ரோஹித், மீண்டும் நல்ல ஃபார்மில் ஆடியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இதே வேகத்தை தக்க வைத்துக்கொள்ள அவர் விரும்புவார். ரோஹித்துடன் இன்னிங்ஸைத் தொடங்கிய இஷான் கிஷான் 36 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். நாளை ஆட்டத்தில் அவரும் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட முயற்சிப்பார்.

இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கும்.

மேலும் படிக்க: T20 WC 2022: வெளியான 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி! இந்திய அணியை கொண்டாடும் ரசிகர்கள்!

கோஹ்லியிடம் இருந்து சதம் எதிர்பார்க்கப்படுகிறது:
ராகுல் திரும்பியவுடன், ரோஹித்துடன் இணைந்து இன்னிங்ஸை துவக்குவாரா அல்லது மிடில் ஆர்டரில் களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களால் கேஎல் ராகுல் முதல் போட்டியில் விளையாடவில்லை. ஒருவளை நாளை போட்டியில் அவர் இன்னிங்ஸைத் தொடங்கினால், இஷான்க்கு வாய்ப்பு கிடைக்காது. அதேநேரத்தில் மிடில் ஆர்டரில் விளையாடினால் முதல் போட்டியில் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்த தீபக் ஹூடாவுக்கு அந்த கிடைக்க வாய்ப்பில்லை. அடுத்தடுத்து களம் இறங்கும் விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் வரிசையை மாற்ற அணி நிர்வாகம் விரும்பவில்லை. இரண்டு வருடங்களாக 71வது சதத்திற்காக காத்திருக்கும் விராட் கோஹ்லிக்கும் இந்த போட்டி முக்கியமானது.

ஸ்பின்னர்கள் மீண்டும் தங்கள் மாயஜாலத்தை நிகழ்த்துவார்களா?
பந்துவீச்சில் சாஹல் மற்றும் வாஷிங்டன் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீச்சில் எந்த மாற்றமும் செய்ய அணி நிர்வாகம் விரும்பவில்லை, ஆனால் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வடிவில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணிக்கு கொண்டு வரலாம். மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகளின் வியூகம் முதல் போட்டியின் தோல்வியை மறந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் இருக்கும். 

மேலும் படிக்க: பொல்லார்டின் பிளானில் சிக்காமல் தப்பிய சூரியகுமார் யாதவ்!

மூத்த ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், “பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு விளையாட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி தங்கள் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களான நிக்கோலஸ் பூரன் மற்றும் பொல்லார்டிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கும்.

இரு அணிகளில் உள்ள வீரர்களின் விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (வி.கே.), தீபக் ஹூடா, ரிஷப் பதான் (வி.கே), தீபக் சாஹர் , ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரபல கிருஷ்ணா மற்றும் அவேஷ் கான்.

மேற்கிந்திய தீவுகள்: கெய்ரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், நக்ருமா போனர், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், கெமர் ரோச், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் வால்ஷ், ஹேடன் ஸ்மித் ஜூனியர்.

மேலும் படிக்க: வெற்றி பாதைக்கு திரும்பிய இந்திய அணி..! 1000-வது போட்டியில் அபார வெற்றி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.