"பிக்பாஸ் மூலம் ஸ்டார் ஆக முடியாது" – நடிகை ரேகா

திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ரேகா, நாட்டியமாடிய சிறுமி ஆதிராவை பாராட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ” நமக்குத் தட்டிக் கொடுக்கவும், ஊக்கப்படுத்தவும் யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றேன். 

ALSO READ | பிக்பாஸின் உண்மையான ஆட்டம் நாளை ஆரம்பம்!

அது முடிந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்றேன். பிக்பாஸில் அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு, ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும் ,வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாறிவிடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும். பிக்பாஸ் மூலம் ஒரு நூறு நாட்கள் தான் பிரபலமாக இருக்கமுடியும். யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த நிலையில் யாரும் பொறுமையாக இருந்து காண்பிக்க வேண்டும். நான் 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன் .என் மீது நிறைய பேருக்குப் பொறாமை இருந்தது. எல்லாம் சாதித்துவிட்டு வந்திருக்கிறார் என்று. ‘நான் இவ்வளவு பெரிய ஆள், நான் ஏன் 17 பேருக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும்?’ என்றெல்லாம் நினைக்கக்கூடாது. அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்த்தேன்” என தெரிவித்தார்.

ALSO READ | Bigboss: பற்றவைக்க தயாராகும் சுரேஷ் தாத்தா.. ஆட ரெடியாகும் அபிராமி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.