அம்மாடியோவ்! அரைக்கிற அம்மில இருந்து உரல் வரை.. எல்லாமே வெள்ளி.. காரைக்குடியில் அசத்தல் சீர்வரிசை!
காரைக்குடி: அரைக்கிற அம்மி முதல் விளையாடுற பல்லாங்குழி வரை அனைத்தையும் வெள்ளியால் சீர் வரிசை கொடுத்து காரைக்குடியில் அசத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே சீர்வரிசை என்பது மிகவும் கவனிக்கத்தக்கக் கூடியதாக இருக்கும். தற்போது பெரும்பாலான இடங்களில் சீர்வரிசை, வரதட்சிணை குறித்தெல்லாம் மக்கள் கவலைப்படுவதில்லை.
கொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகா
பெண் கிடைத்தால் போதும் என திருமணம் நடக்கிறது. இன்னும் சில இடங்களில் உங்கள் சக்தி முடிவதை செய்தால் போதும். எந்தவித டிமான்டும் கிடையாது என்று சொல்லி விடுகிறார்கள்.

மாப்பிள்ளை வீடு
என்னதான் மாப்பிள்ளை வீட்டில் எதையுமே வேண்டாம் என்றாலும் ஒரு கவுரம், பழக்கவழக்கம், மரபுக்காக சீர்வரிசைகளை மக்கள் செய்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஊர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ஒவ்வொரு மாதிரியான பழக்க வழக்கங்கள் இருக்கும்.

ஜல்லடை
உதாரணமாக பெண் பூப்பெய்துவிட்டால் அவரை வீட்டில் அழைத்து கொள்ளும் போது சிலர் இரும்பு ஜல்லடையை பயன்படுத்தி தண்ணீர் ஊற்றுவர். ஆனால் சிலர் வெள்ளி ஜல்லடையில்தான் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்ற பழக்கம் இருக்கிறது. அதுபோல்தான் திருமண வைபவங்களிலும் பழக்கங்கள் மாறுபடும்.

இடவசதி
காரைக்குடி என எடுத்துக் கொண்டால், ஆடம்பரமான அரண்மனைகள், இரு தெருக்கள் சேர்ந்தாற் போல பெரிய பெரிய வீடுகள் நினைவுக்கு வரும். அது போல் காரைக்குடி உணவு. அதிலும் அசைவ உணவு பிரபலம். பெரும்பாலும் காரைக்குடியை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டிலேயே திருமண வைபவங்களை நடத்தி கொள்ளும் அளவுக்கு இடவசதி தாராளமாகவே இருக்கும்.

வீடுகள்
உணவு, வீடுகளை போல் இவர்கள் கொடுக்கும் சீர்வரிசையிலும் வித்தியாசம் இருக்கும். ஆனால் வித்தியாசத்திலும் வித்தியாசம் என்பதை போல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சீர் வரிசை பொருட்கள் அனைத்துமே வெள்ளியில் வாங்கி வைக்கப்பட்டிருந்தன. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும்.

அம்மிக்கல்
அந்த சீர்வரிசையில் அம்மி, அம்மிக் கல், இட்லி அவிக்கும் பாத்திரம், சொம்புகள், தட்டுகள், சிறிய சொப்பு சாமான்கள், பல்லாங்குழி, பன்னீர் சொம்பு, குத்து விளக்குகள், மூடி போட்ட பாத்திரங்கள், இஞ்சி, பூண்டு நசுக்கும் சிறிய உரல், வாளிகள், நெல்லை குத்தும் கல், குடங்கள், சங்கு, தாம்பூலம் உள்ளிட்ட பொருட்கள் வெள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக மங்களகரமான பொருட்களான குங்கும சிமிழ், குத்து விளக்கு, சந்தன பேலா, பன்னீர் தெளிக்கும் சொம்பு ஆகியவற்றை வெள்ளியில் கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கு சீர் வரிசை பொருட்கள் அனைத்தையும் வெள்ளியில் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்து வாயடைத்து போகிறார்கள்.