ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் கைதான 5 பாதிரியார்களுக்கு ஜாமீன் மறுப்பு

ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் கைதான 5 பாதிரியார்களுக்கு ஜாமீன் மறுப்புநெல்லை: கல்லிடைக்குறிச்சி அருகே ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் கைதான 5 பாதிரியார்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. எம் சாண்ட் எனும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி 27 ஆயிரம் கியூபிக் ஆற்று மணல் கடத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த 5 பாதிரியார்களை சிபிசிஐடி போலீசார் பிப்.7-ல் கைது செய்தநிலையில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நெல்லை குற்றவியல் நீதிமன்றம் 5 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.