இபிஎஸ், ஓபிஎஸ்சின் புதிய கம்பெனி; தெறிக்க விட்ட முதல்வர்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்கிற தலைப்பில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
காணொலி மூலம் உரையாற்றினார்.

டிராஜிடியில் முடிந்த டிரெக்கிங்; சிக்கி தவித்த இளைஞர்!

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சியை இழந்ததால் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி என்னவோ பேசிக்கொண்டு இருக்கிறார். என்னை சர்வாதிகாரி என்கிறார். அடுத்த நிமிடமே என்னை பொம்மை என்று சொல்கிறார். அவருக்கு சர்வாதிகாரி என்றால் என்ன என்பதே தெரியவில்லை.

பதவி விலகும் தமிழக ஆளுநர்?; கிண்டி ராஜ்பவனில் பரபரப்பு!

டெல்லியில் போராடும் விவசாயிகளை பார்த்து அவர்கள் விவசாயிகள் அல்ல, தரகர்கள் என்று பழனிசாமி சொன்னது தான் சர்வாதிகாரத்தனம். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சம்பள உயர்வு கேட்டபோது, எல்லாரும் சம்பளம் கூட்டி கேட்டால் எப்படி தரமுடியும்? அவசர காலத்தில் வேலை செய்வதுதான் அவர்கள் பணியே என்று பழனிசாமி சொன்னது தான் சர்வாதிகாரம்.

13 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதை டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன் என முதல்வராக இருந்து கொண்டு சொன்னதுதான் சர்வாதிகாரத்தின் உச்சம். ஒன்றிய பாஜக அரசு சொன்னதற்கு எல்லாம் தலையாட்டி அவர்களின் பாதம் தாங்கி கிடந்த பழனிசாமியை விட தலையாட்டி பொம்மைக்கு உதாரணம் வேண்டுமா? பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அடிமை சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள்.

இன்று பதவி பறிபோனதும் இருவருமே ஊருக்கு அறிவுரை சொல்லி வருகிறார்கள். அதிமுக தான் மக்களாட்சியை கொடுத்தது என்கிறார் பழனிசாமி. மக்களாட்சியை அதிமுக கொடுத்தால் அதற்கு மக்கள் ஏன் தோல்வியை கொடுத்தார்கள்?

பிரதமர் ஆர்டர், ஒரு வாரத்தில் புது பிரச்சனை; பரபரப்பை எகிற விட்ட பாஜக அண்ணாமலை!

அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று பன்னீர்செல்வம் சொல்லி கொண்டு இருக்கிறார். கடந்த 2011 முதல் 2021 வரை பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது அதிமுக.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

பழனிசாமி கொடுத்த செல்போன் உங்கள் ஊரில் யாரிடமாவது இருக்கிறதா? பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுப்பதாக சொல்லி 50 பேருக்குக் கொடுத்துவிட்டு கடையை மூடிய கம்பெனி தான் அதிமுக.

முதல்வருக்கே தண்ணி காட்டிய திமுக; ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு சீட்டு!

திடீரென்று சீட்டு பிடிக்கும் கம்பெனிகள் உருவாகும். மக்களிடம் பணத்தை வசூல் செய்ததும் ஓடி விடும். அப்படி ஓடும் கம்பெனி தான் பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனி. அவர்கள் எங்களை பார்த்து குறை சொல்வதா?

தேர்தல் வாக்குறுதிகளை அச்சிட்டு கொடுத்திருக்கிறேன். பெரும்பாலான வாக்குறுதிகளை எட்டே மாதத்தில் நிறைவேற்றி விட்டதாக துணிச்சலாக நான் சொல்கிறேன். அந்த புத்தகத்தை வைத்து பாருங்கள். அதில் சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

அனைத்தையும் ஒன்று விடாமல் நாங்கள் நிறைவேற்றுவோம். அளித்த அனைத்து வாக்குறுதியை நிறைவேற்றுவது ஒன்று தான் எமது இலக்கு. இவ்வாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.