கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த கணவர்.. அப்பதான் ஆண் குழந்தை பிறக்குமாம்..புது உருட்டா இருக்கே

கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த கணவர்.. அப்பதான் ஆண் குழந்தை பிறக்குமாம்..புது உருட்டா இருக்கே

இஸ்லாமாபாத் : மூன்று பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் நான்காவதாக ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கர்ப்பிணி பெண்ணின் தலையில் கணவரே இரண்டு இஞ்ச் அளவுக்கு ஆணி அடித்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூஜை மாந்திரிகம் செய்வதாக பணம் பரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டில் புதையல் உள்ளது, வீட்டில் உள்ள நபர்களுக்கு தோஷம் உள்ளது அதனை கழிக்க பரிகாரம் செய்ய வேண்டும் என ஆசை காட்டியும் பயம் காட்டியும் மோசம் செய்யும் டுபாக்கூர் சாமியார்களால் பணத்தை இழந்த மக்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அதனை விட பயம் காட்டி பெண்களிடம் அத்துமீறும் சாமியார்கள் கம்பிகளுக்கிடையே களி தின்னும் சுவாமிகளின் எண்ணிக்கையே நூறைத்தாண்டும். சில நேரங்களில் நரபலி என்னும் கொடூரமும் நடைபெறுவது வேதனையின் உச்சம்.

'கோல்மால் லேடி'.. டெஸ்டுக்கு வந்த இடத்தில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. அப்படியே மிரண்டுபோன போலீஸ்‘கோல்மால் லேடி’.. டெஸ்டுக்கு வந்த இடத்தில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. அப்படியே மிரண்டுபோன போலீஸ்

பாகிஸ்தானி அதிர்ச்சி

பாகிஸ்தானி அதிர்ச்சி

இந்நிலையில் பாகிஸ்தானி ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் மனைவியின் தலையில் ஆணி அடிக்க வேண்டுமென்ற டுபாக்கூர் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, கர்ப்பிணி மனைவியின் தலையின் கணவன் இரண்டு இஞ்ச் அளவுக்கு அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஆண் குழந்தைகள்தான் பெற்றோர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் வாரிசாகவும் திகழ்வார்கள் என நம்பிக்கை உள்ளது. மேலும் போலியான நம்பிக்கைகளை விதைத்து மக்களிடம் சுரண்டலில் ஈடுபடும் போலி மத குருக்களும் பாகிஸ்தானில் அதிக அளவில் இருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண்

கர்ப்பிணி பெண்

இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு தலையில் படுகாயத்துடன் பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். கர்ப்பிணியான அந்தப்பெண் சுயநினைவுடன் இருந்தபோதும் அதிகமான வலியில் அலறி துடித்து உள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது தலையில் சுமார் இரண்டு இன்ச் அளவுக்கு ஆணி அடிக்கப்பட்டு இருந்தது. நெற்றியின் மேல் பகுதியை துளைத்திருந்த ஆணி அதிர்ஷ்டவசமாக மூளையை தாக்கவில்லை. இதையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர் ஹைதர் கான், சக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் உதவியோடு பெண்ணின் தலையில் துளைத்திருந்த ஆணியை அகற்றினர்.

ஆண் குழந்தைக்கு ஆசை

ஆண் குழந்தைக்கு ஆசை

ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளின் தாயான அந்தப் பெண் தற்போதும் கர்ப்பமாக இருந்ததாக மருத்துவர் ஹைதர் கான் தெரிவித்துள்ளார். தலையில் ஆணி எவ்வாறு தொலைத்தது என கேட்ட போது மருத்துவர் மட்டுமல்லாது மருத்துவமனையில் இருந்த அனைவருமே கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே தனக்கு மூன்று பெண்குழந்தைகள் உள்ள நிலையில் தான் மீண்டும் கர்ப்பமானதாகவும் நான்காவதாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என தனது கணவர் ஆசைப்படுவதாக கூறியுள்ளார். நகரின் பல்வேறு இடங்களில் சாமியார்களையும் மதகுருக்களையும் சந்தித்த தனது கணவர் இறுதியாக ஹீலர் ஒருவரை சந்தித்துள்ளார்.

மனைவியின் தலையில் ஆணி

மனைவியின் தலையில் ஆணி

தனது மத நம்பிக்கைப்படி கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் தலையில் ஆணி அடித்தால் நான்காவதாக கண்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும் என அந்த மந்திரவாதி கூறியதையடுத்து வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் கணவர் சுத்தியலை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் ஆணியை படாரென்று அடித்துள்ளார். வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்தப் பெண் அருகில் இருந்தோர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஆணியை அகற்றிய சில நிமிடங்களிலேயே அவர் அங்கிருந்து தப்பி உள்ளார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதுகுறித்து மருத்துவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மருத்துவமனையிலிருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அந்த பெண்ணை கண்டுபிடித்து, கணவர் மற்றும் மந்திரவாதியை கைது செய்வோம் என பெருநகர காவல்துறை தலைவர் அப்பாஸ் அஹ்சன் தெரிவித்துள்ளார். ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
The incident in which a pregnant woman hit her husband on the head with a nail thinking that she should give birth to a baby boy has caused shock in Pakistan.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.